எமது நோக்கு
மக்களின் வளமான வாழ்வுக்காக சிறந்த அரச சேவை வழங்குதல்.
எமது இலக்கு
அரச கொள்கைகளுக்கு அமைவாக சேவை வழங்குதல், வள ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் பங்களிப்புடனான வினைத்திறன், பேண்தகு மற்றும் திட்டமிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினூடாக கொபெய்கனே பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துதல்.
அறிமுகம்
இலங்கையில், வடமேல் மாகாணத்தில், குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள நிகவரட்டிய தேர்தல் தொகுதிக்கு உரித்தான நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒன்றானது கொபெய்கனே பிரதேச செயலகப் பிரிவாகும். இப்பிரிவானது 'பலதொர கோரளை' எனும் ஒரு கொரலையை மாத்திரம் கொண்டது.
கொபெய்கனே பிரதேச செயலகப் பிரிவானது பண்டைய பண்டுவஸ்நுவர இராசதானியை ஆட்சி செய்த மகாசேன மன்னனினால் கட்டப்பட்ட மாகல்ல குளம் மற்றும் 1ம் பராக்கிரமபாகு மன்னனினால் உருவாக்கப்பட்ட நீர்பாசனத் திட்டம் என்பவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்நீர்பாசனத் திட்டமானது 229 சிறிய குளங்களையும் 05 அணைக்கட்டுகளையும் கொண்டுள்ளது. இது பண்டைய ஆட்சி காலத்தில் இருந்தே மக்கள் விவசாயத்தை தமது பிரதான வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர் என்பதற்கு சான்றுபகர்கின்றது.
இடைவெப்ப வலயத்துக்குட்பட்ட இப்பிரிவில் வெப்ப வலயத்துக்குரிய இயல்புகளையும் காணக்கூடியதாக உள்ளத்துடன், இங்கு சராசரி வெப்பநிலையானது 26oC ஆகும். சராசரி மழைவீழ்ச்சியானது வடகீழ் பருவக்காற்று மூலம் 93.77 மில்லி மீற்றர்களும் தென்மேல் பருவக்காற்று மூலம் 30.35 மில்லி மீற்றர்களும் கிடைக்கப்பெறும்.
இப்பிரிவினது மொத்த நிலப்பரப்பு 48.07 சதுர மைல்களும் மொத்த சனத்தொகை 40179 உம் ஆகும். இது 19470 ஆண்களையும் 20709 பெண்களையும் உள்ளடக்கியது. மொத்த சனத்தொகையில் 87.17% பௌத்தர்களாவார். சிங்கள மக்கள் தொகை 35740 ஆகும். முஸ்லிம் மக்கள் தொகை 4365 ஆக காணப்படுவதுடன் அவர்கள் பரவலாக பன்னவ வெல்பொதுவெவ எனும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வாழ்கின்றனர். ஏனைய இனத்தவர்களும் இப்பிரிவுகளில் சிறிய அளவில் பரவி உள்ளனர்.
தற்போது மக்களுடைய வாழ்க்கைக் கோலம் விவசாயத்தை சார்ந்ததாகக் காணப்படுவதோடு, அதில் பிரதானமானது நெற் பயிர்ச்செய்கையாகும். மரக்கறி பயிர்ச்செய்கை மற்றும் விலங்கு வேளாண்மை என்பனவும் மேலதிகமாக மேற்கொள்ளப்படுகின்றது. 60% நிலப்பரப்பில் தென்னையும் 15% நிலப்பரப்பில் ஏனைய பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
இப்பிரிவு சிறிய நிறுவகப் பிரிவான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 35 ஐயும் 135 கிராமங்களையும் கொண்டுள்ளது. 35 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் 03 சமூர்த்தி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவினூடாக செல்லும் பிரதான பாதையானது குருநாகல் - சிலாபம் பாதையின் நுகவல சந்தி தொடக்கம் புத்தளம் - குருநாகல் பாதையின் வித்திகுலிய சந்தி வரையிலான 12.5 கி.மீ. நீளமான பாதையாகும். கொபெய்கனே நகரின் மத்திய பகுதியிலிருந்து பாதெனிய நகர் வரை செல்லும் பாதையானது குருநாகல் - புத்தளம் பாதையை கொபெய்கனே நகரத்துடன் இணைக்கும். இப்பிரிவில் காணப்படும் ஏனைய 342 பாதைகளும் இப்பிரதான பாதையினூடாக கொபெய்கனே நகரத்துடன் தொடர்புபடும்.
இப்பிரிவில் காணப்படுகின்ற அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களான பிரதேச செயலகம், உள்நாட்டு அரச நிறுவனம், விவசாய நிலையம், மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதான தபால் நிலையம், உப தபால் நிலையம், மாவட்ட வைத்தியசாலை, பொரலுவெவ மத்திய மருந்தகம், ஆயுர்வேத மத்திய மருந்தகம், இலங்கை போலீஸ் மற்றும் கோட்ட மட்டக் கல்விக் காரியாலயம் என்பன பிரதேச மக்களின் அபிவிருத்தி மற்றும் நலன்புரிக்காக பங்களிப்பு செய்கின்றன.
அதே போன்று பிரதேச மக்களின் கொள்வனவு மற்றும் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நிறுவனமான கூட்டுறவு சங்கமானது 16 பிரதேச ரீதியான காரியாலயங்களையும் கூட்டுறவு பல்பொருள் சந்தை ஒன்றையும் 11 கிராமிய வங்கிகளையும் கொண்டுள்ளது.
கைத்தொழில் துறையை கருத்திற் கொள்ளும் பொது தென்னை சார் உற்பத்திகள் கணிசமான அளவு காணக்கூடியதாக உள்ளது. கயிறு திரித்தல், பலகை மற்றும் தும்புச்சோறு சார்ந்த உற்பத்திகள் இவற்றில் பிரதானமானவை. இதற்கு மேலதிகமாக மரமுந்திரிகை செங்கல் உற்பத்தி போன்றனவும் காணக்கூடியதாக உள்ளது.
மேலும் பாரம்பரிய கைத்தொழில்களான ஆபரண உற்பத்தி, பட்டறை கைத்தொழில், தச்சு தொழில் போன்றனவும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணப்படுகின்றன.
குறிப்பிட்ட வளங்களை கொண்டுள்ள கொபெய்கனே பிரதேச மக்களின் வாழ்க்கையை மிகவும் வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வது அப்பிரதேச நிருவாக மையமான பிரதேச செயலாளர் காரியாலயத்தினது ஒரு பொறுப்பாகும்.
இப்பிரதேசத்தில் நிறுவாகப் பிரதானிகளாக கடமையாற்றியவர்கள்
| பெயர் | தொடக்கம் | வரை |
| திரு. ஆர். எம். சி. ரணசிங்க | 1978 | 1980 |
| திரு. எஸ். ஏ.நாகாநந்த | 1980 | 1981 |
| திரு. ஜெ. எச். விஜேவிக்ரம | 1981 | |
| திரு. டப். எம். பியசேன | 1981 | 1982 |
| திரு. எம். எச். வி. கே. எம். பண்டார | 1982 | 1993 |
| திரு. ஆர். எம். வி. ஆர். மொன்னம்குலம | 1993 | 1995 |
| திரு. டப். ஜெ. விமலசேன | 1995 | 1998 |
| திரு. எஸ். எம். ஜயதிலக்க (பதில் கடமை) | 1998 | 1999 |
| திருமதி. வி. மாலனி | 1999 | 2000 |
| திரு. லலித் தொடம்கொடுவ | 2000 | 2006 |
| திருமதி. என். எம். ஜெ. பெர்னாண்டோ | 2006 | 2009 |
| திரு. ஆர். எம். டப். எஸ். சமரதிவாகர | 2009 | 2012 |
| திரு. ஏ. எம். ஆர். ஜெ. கே. ஜயசிங்க | 2012.01 | 2012.06 |
| செல்வி. ஈ. எம். எஸ். பி.ஏகநாயக்க | 2012.06 | 2016.06.02 |
| திரு. என். ஏ. ஏ. எஸ். பிரியங்கர | 2016.06.03 | இன்று வரை |


















