எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

குடியுரிமை சாசனம்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

15
செப்2023
எசல பக்திப் பாடல் வரிசை – 2026

எசல பக்திப் பாடல் வரிசை – 2026

எசல பக்திப் பாடல் வரிசை -  2026  ...

09
செப்2022
சமுர்த்தித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வீட்டுவசதி உதவி நிதியைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளித்தல்.

சமுர்த்தித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வீட்டுவசதி உதவி நிதியைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளித்தல்.

சமுர்த்தித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வீட்டுவசதி உதவி நிதியைப் பயன்படுத்தி...

எமது பிரதேச செயலாளர் காரியாலயத்தின் உத்தியோகத்தர் எண்ணிக்கை தொடர்பான விபரம் 

பதவி  மத்திய அரசு  பதவி வெற்றிடம்  மாகாண சபை  பதவி வெற்றிடம்
அனுமதிக்கப்பட்ட  தற்போது உள்ள  அனுமதிக்கப்பட்ட தற்போது உள்ள
பிரதேச செயலாளர்  01 01 - - - -
உதவி பிரதேச செயலாளர்  01 01 - - - -
கணக்காளர்  01 01 - - - -
உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) 01 01
நிருவாக உத்தியோகத்தர்  01 - 01 - - -
நிருவாக உத்தியோகத்தர் (கிராம உத்தியோகத்தர்) 01 - 01  -  -
உதவி மாவட்ட பதிவாளர்  01 01 - - - -
அரச முகாமைத்துவ சேவை  26 24 02 - - -
ஓய்வூதிய உத்தியோகத்தர்  01 01 - - -
மொழிபெயர்ப்பாளர்  - 01 - - - -
சாரதி  02 02 - - - -
காரியாலய உதவியாளர்  06 06 - - - -
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் சேவை  01 - 01 - - -
கிராம உத்தியோகத்தர்  35 32 03  -  -
As DS

பிரதேச செயலாளர்


பெயர் திருமதி.டபிள்யூ.டி.என்.சில்வா
தகுதி
  • MA (Sociology) - களனியா பல்கலைக்கழகம்
  • BSc. (Physical Science),General - களனியா பல்கலைக்கழகம்
  • பொது நிர்வாகத்தில் சான்றிதழ் - இலங்கை மேம்பாட்டு நிர்வாக நிறுவனம், கொழும்பு 07

வேலை வரலாறு
  •  01.09.2000 - 23.02.2007 - பொது மேலாண்மை உதவியாளர் (III) - தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சித் துறை
  •  24.02.2007 - 07.10.2010 - நிர்வாக அலுவலர் - நிதிக் கொள்கை துறை, நிதி அமைச்சகம்
  •  08.10.2010 -06.02.2011 - கேடட் - இலங்கை நிர்வாக சேவை, இலங்கை மேம்பாட்டு நிர்வாக நிறுவனம், கொழும்பு 07  
  •  07.02.2011 - 07.10.2012 - உதவி ஆணையர் - பிராந்திய அலுவலகம் - திவூலபிட்டி மற்றும் மினுவங்கோடா, நில தலைப்பு தீர்வுத் துறை
  • 08.10.2012 - 16.05. 2015 - உதவி கோட்ட செயலாளர் - உதவி கோட்ட செயலாளர் - பிரதேச செயலகம் -ருவன்வெல்லா
  •  17.05.2015 -08.01.2020 -உதவி கோட்ட செயலாளர் - உதவி கோட்ட செயலாளர் - பிரதேச செயலகம் - குலியபிட்டி மேற்கு
  • 09.01.2020 - புதுப்பித்த வரை - பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம் - கோபிகேன்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

   

 ADS

உதவி பிரதேச செயலாளர்

பெயர் திரு.பி.கே.எம்.பி.குமார
தகுதி
  • BSc.Applied Science - Srilanka வயம்பா பல்கலைக்கழகம்
 வேலை வரலாறு
  • 15.03.2019 - 21.11.2021 - உள்துறை அமைச்சகம்
  • 22.11.2022- இன்றுவரை - உதவி பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம் - கொபேகனே
 ACC

கணக்காளர்

பெயர் திருமதி.ஆர்.ஏ.எஸ்.பி.குமாரி
தகுதி
  • BSc. Management (Public) Special Degree
  • பொது கணக்கியல் மற்றும் நிதி டிப்ளோமா - இலங்கை மேம்பாட்டு நிர்வாக நிறுவனம், கொழும்பு 07
  • இடைநிலை நிலை - பட்டியலிடப்பட்ட கணக்காளர்களின் நிறுவனம், கொழும்பு 07
வேலை வரலாறு
  • தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சித் துறை
           2005 - 2007 - பயிற்சி உதவியாளர் (பட்ஜெட்) - தொழில்நுட்பக் கல்லூரி - தம்புல்லா
           2007 - 2011-  பயிற்சி உதவியாளர் (பட்ஜெட்) - தொழில்நுட்பக் கல்லூரி - அனாமடுவா
           2011 - 2015-  பயிற்சி உதவியாளர் (பட்ஜெட்) - தொழில்நுட்பக் கல்லூரி - வாரியபோலா
  • 21.12.2020 - புதுப்பித்தல்- கணக்காளர் - பிரதேச செயலகம் - கோட்டாவேரா
 
AD n

உதவி இயக்குனர் (திட்டமிடல்)

   பெயர் திரு. ஜே.எம்.என் ஜெயசுந்தர
தகுதி
  • இளங்கலை - கொழும்பு பல்கலைக்கழகம்
வேலை வரலாறு
  • 01.01.2005 - 03.04.2022 - பிரதேச செயலகம் - நிக்கவெரட்டிய
  • 04.04.2022 இன்றுவரை - பிரதேச செயலகம் - கொபேகனே

எமது நோக்கு  

மக்களின் வளமான வாழ்வுக்காக சிறந்த அரச சேவை வழங்குதல்.

எமது இலக்கு 

அரச கொள்கைகளுக்கு அமைவாக சேவை வழங்குதல், வள ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் பங்களிப்புடனான வினைத்திறன், பேண்தகு மற்றும் திட்டமிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினூடாக கொபெய்கனே  பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துதல்.  

அறிமுகம் 
 
இலங்கையில், வடமேல் மாகாணத்தில், குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள நிகவரட்டிய தேர்தல் தொகுதிக்கு உரித்தான நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒன்றானது கொபெய்கனே பிரதேச செயலகப் பிரிவாகும். இப்பிரிவானது 'பலதொர கோரளை' எனும் ஒரு கொரலையை மாத்திரம் கொண்டது.
 
கொபெய்கனே பிரதேச செயலகப் பிரிவானது பண்டைய பண்டுவஸ்நுவர இராசதானியை ஆட்சி செய்த மகாசேன மன்னனினால் கட்டப்பட்ட மாகல்ல குளம் மற்றும் 1ம் பராக்கிரமபாகு மன்னனினால் உருவாக்கப்பட்ட நீர்பாசனத் திட்டம் என்பவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்நீர்பாசனத் திட்டமானது 229 சிறிய குளங்களையும் 05 அணைக்கட்டுகளையும் கொண்டுள்ளது. இது பண்டைய ஆட்சி காலத்தில் இருந்தே மக்கள் விவசாயத்தை தமது பிரதான வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர் என்பதற்கு சான்றுபகர்கின்றது.
 
இடைவெப்ப வலயத்துக்குட்பட்ட இப்பிரிவில் வெப்ப வலயத்துக்குரிய இயல்புகளையும் காணக்கூடியதாக உள்ளத்துடன், இங்கு சராசரி வெப்பநிலையானது 26oC ஆகும். சராசரி மழைவீழ்ச்சியானது வடகீழ் பருவக்காற்று மூலம் 93.77 மில்லி மீற்றர்களும் தென்மேல் பருவக்காற்று மூலம் 30.35 மில்லி மீற்றர்களும் கிடைக்கப்பெறும்.
 
இப்பிரிவினது மொத்த நிலப்பரப்பு 48.07 சதுர மைல்களும் மொத்த சனத்தொகை 40179 உம் ஆகும். இது 19470 ஆண்களையும் 20709 பெண்களையும் உள்ளடக்கியது. மொத்த சனத்தொகையில் 87.17% பௌத்தர்களாவார். சிங்கள மக்கள் தொகை 35740 ஆகும்.  முஸ்லிம் மக்கள் தொகை 4365 ஆக காணப்படுவதுடன் அவர்கள் பரவலாக பன்னவ  வெல்பொதுவெவ எனும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வாழ்கின்றனர். ஏனைய இனத்தவர்களும் இப்பிரிவுகளில் சிறிய அளவில் பரவி உள்ளனர்.
 
தற்போது மக்களுடைய வாழ்க்கைக் கோலம் விவசாயத்தை சார்ந்ததாகக் காணப்படுவதோடு, அதில் பிரதானமானது நெற் பயிர்ச்செய்கையாகும். மரக்கறி பயிர்ச்செய்கை மற்றும் விலங்கு வேளாண்மை என்பனவும் மேலதிகமாக மேற்கொள்ளப்படுகின்றது. 60%  நிலப்பரப்பில் தென்னையும் 15% நிலப்பரப்பில் ஏனைய பயிர்களும் பயிரிடப்படுகின்றன. 
 
இப்பிரிவு சிறிய நிறுவகப் பிரிவான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 35 ஐயும் 135 கிராமங்களையும் கொண்டுள்ளது. 35 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் 03 சமூர்த்தி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
இப்பிரிவினூடாக செல்லும் பிரதான பாதையானது குருநாகல் - சிலாபம் பாதையின் நுகவல சந்தி தொடக்கம் புத்தளம் - குருநாகல் பாதையின் வித்திகுலிய சந்தி வரையிலான 12.5 கி.மீ. நீளமான பாதையாகும். கொபெய்கனே நகரின் மத்திய பகுதியிலிருந்து பாதெனிய நகர் வரை செல்லும் பாதையானது குருநாகல் - புத்தளம் பாதையை கொபெய்கனே நகரத்துடன் இணைக்கும். இப்பிரிவில் காணப்படும் ஏனைய 342 பாதைகளும் இப்பிரதான பாதையினூடாக கொபெய்கனே நகரத்துடன் தொடர்புபடும்.    
 
இப்பிரிவில் காணப்படுகின்ற அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களான பிரதேச செயலகம், உள்நாட்டு அரச நிறுவனம், விவசாய நிலையம், மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதான தபால் நிலையம், உப தபால் நிலையம், மாவட்ட  வைத்தியசாலை, பொரலுவெவ மத்திய மருந்தகம், ஆயுர்வேத மத்திய மருந்தகம், இலங்கை போலீஸ் மற்றும் கோட்ட மட்டக் கல்விக் காரியாலயம் என்பன பிரதேச மக்களின் அபிவிருத்தி மற்றும் நலன்புரிக்காக பங்களிப்பு செய்கின்றன.   
 
அதே போன்று பிரதேச மக்களின் கொள்வனவு மற்றும் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நிறுவனமான கூட்டுறவு சங்கமானது 16 பிரதேச ரீதியான காரியாலயங்களையும் கூட்டுறவு பல்பொருள் சந்தை ஒன்றையும் 11 கிராமிய வங்கிகளையும் கொண்டுள்ளது. 
 
கைத்தொழில் துறையை கருத்திற் கொள்ளும் பொது தென்னை சார் உற்பத்திகள் கணிசமான அளவு காணக்கூடியதாக உள்ளது. கயிறு திரித்தல், பலகை மற்றும் தும்புச்சோறு சார்ந்த உற்பத்திகள் இவற்றில் பிரதானமானவை. இதற்கு மேலதிகமாக மரமுந்திரிகை செங்கல் உற்பத்தி போன்றனவும் காணக்கூடியதாக உள்ளது. 
 
மேலும் பாரம்பரிய கைத்தொழில்களான ஆபரண  உற்பத்தி, பட்டறை கைத்தொழில், தச்சு தொழில் போன்றனவும் கிராம  உத்தியோகத்தர் பிரிவுகளில் காணப்படுகின்றன. 
 
குறிப்பிட்ட வளங்களை கொண்டுள்ள கொபெய்கனே பிரதேச மக்களின் வாழ்க்கையை மிகவும் வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வது அப்பிரதேச நிருவாக மையமான பிரதேச செயலாளர் காரியாலயத்தினது ஒரு பொறுப்பாகும்.

இப்பிரதேசத்தில் நிறுவாகப் பிரதானிகளாக கடமையாற்றியவர்கள் 

பெயர்  தொடக்கம்  வரை 
திரு. ஆர். எம். சி. ரணசிங்க  1978 1980
திரு. எஸ். ஏ.நாகாநந்த 1980 1981
திரு. ஜெ. எச். விஜேவிக்ரம  1981
திரு. டப். எம். பியசேன  1981 1982
திரு. எம். எச். வி. கே. எம். பண்டார  1982 1993
திரு. ஆர். எம். வி. ஆர். மொன்னம்குலம  1993 1995
திரு. டப். ஜெ. விமலசேன  1995 1998
திரு. எஸ். எம். ஜயதிலக்க (பதில் கடமை) 1998 1999
திருமதி. வி. மாலனி  1999 2000
திரு. லலித் தொடம்கொடுவ 2000 2006
திருமதி. என். எம். ஜெ. பெர்னாண்டோ  2006 2009
திரு. ஆர். எம். டப். எஸ். சமரதிவாகர  2009 2012 
திரு. ஏ. எம். ஆர். ஜெ. கே. ஜயசிங்க  2012.01 2012.06
செல்வி. ஈ. எம். எஸ். பி.ஏகநாயக்க 2012.06 2016.06.02
திரு. என். ஏ. ஏ. எஸ். பிரியங்கர  2016.06.03  இன்று வரை 
Scroll To Top